• Oct 17 2024

ராஜமவுலியின் பிரமாண்ட படைப்பு... பாகுபலி 3 குறித்து அப்டேட் இதோ...

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா டகுபட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 1 பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றது முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் வட இந்தியாவிலும் பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது.


ராஜமவுலி இயக்கத்தில் அடுத்த வந்த RRR படமும் அதே போல பெரிய வெற்றியைப் பெற்றது அதில் நடித்த ராம் சரண், ஜூனியர் என்டிஆர் பான் இந்தியா பிரபலமாகினார். 'பாகுபலி 2 படம் வெளிவந்த பின்பே 'பாகுபலி 3 பற்றிய பேச்சுக்களும் எழுந்தது. ஆனால், அது எப்போது உருவாகும் என்பது குறித்த நிலையான தகவல் இல்லாமல் இருந்தது. 


இந்நிலையில் 'பாகுபலி 1 படத்தை தமிழகத்தில் வெளியிட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பாகுபலி தயாரிப்பாளர்களிடம் பேசிய போது அவர்கள் 'பாகுபலி 3' பற்றி திட்டமிட்டு வருகிறார்கள் என்பது தெரிந்தது என்று கூறியுள்ளார்.


ராஜமவுலி அடுத்து மகேஷ் பாபு நடிக்க உள்ள படத்தை இயக்கும் வேலைகளில் உள்ளார். அந்தப் படத்தை எடுத்து முடித்து வெளியிட்ட பின்பு 'பாகுபலி 3' பட வேலைகளில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement