• Nov 02 2024

அடுத்தடுத்து கமிட்டாகும் சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள்! வெட்கத்தில் மீனாவின் தங்கச்சி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் காணப்படுகின்றது.

சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. நாளானந்தம் இதன் கதைக்களம் மாறுபட்ட ரீதியிலும் சுவாரசியமாகவும் ஒளிபரப்பாகி வருகின்றது. இதன் காரணத்தினாலே இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது.

இன்றைய தினம் இடம்பெற்ற எபிசொட்டில் முத்துவின் போனில் இருக்கும் சத்யாவின் வீடியோவை எடுக்கும் முயற்சியில் ரோகினி தோற்று விடுகின்றார். அத்துடன் மீனாவின் தங்கச்சி சீதாவை பொண்ணு கேட்டு வருகின்றார்கள். இதனால் மீனாவின் குடும்பத்தார் சந்தோஷப்படுகிறார்கள்.


இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தங்கச்சியாக சீதா கேரக்டரில் நடித்தவர்தான் சங்கீதா. இவர் நடிகையாக மட்டும் இல்லாமல் டாக்டராகவும் காணப்படுகின்றார்.

தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்தவர்கள் இதுதான் உங்களது காதலனா? என்று கேள்வி எழுப்பி வருகின்றார்கள் அதற்கு காரணம் அவர் மிக நெருக்கமாக இருப்பதும் கைகளில் ஹார்ட் போட்டு சிம்போல் காட்டுவதும் தான். இதோ அந்த வீடியோ.

Advertisement

Advertisement