• Jan 19 2025

பாக்கியா குடும்பத்தாருக்கு விழுந்த அடுத்த அடி.? எமோஷனலாக முடிவெடுத்த ஜெனி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஜெனியின் அம்மா அவரை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக வந்திருக்கின்றார். பாக்கியாவிடம் சொல்லி புரிய வைக்க அவர் ஜெனி அழைத்துப் போகுமாறு சொல்லுகின்றார்.

அதன் பின்பு ஜெனியின் துணிமணிகளை எல்லாம் எடுத்து அடுக்கிக் கொண்டு இருக்கும் போது, என்னை ஏன் அழைத்துச் செல்கின்றாய் என்று ஜெனி கேட்க, பாக்கியா தான் போன் பண்ணி உன்னை கூட்டிப் போக சொன்னதாக சொல்லுகின்றார்.

இதையடுத்து கீழே வந்த ஜெனி, நான் உங்களுக்கு பிரச்சினையா போயிட்டேனா? இந்த வீட்டில் எல்லோரும் சந்தோஷமா இருக்கும்போது இருக்கணும் பிரச்சனை வந்தால் மட்டும் நான் வெளியே போகணுமா? என்று ரொம்பவும் எமோஷனலாக பேசுகின்றார். இதை கேட்டு ஈஸ்வரியும் பாக்கியாவும் கண் கலங்குகின்றார்கள். அதன் பின்பு பாக்கியா நீ எங்கும் போக வேண்டாம் எங்கே இரு என்று அவரை கட்டி அணைத்து  சொல்லுகின்றார்.


இதை தொடர்ந்து பாக்கியா ரெஸ்டாரண்ட் சென்று அதனை பார்த்து கவலைப்படுகிறார். அந்த நேரத்தில் எழில் அங்கே வர, செல்வி அவரிடம் இன்னும் 8 லட்சம் ரூபாய் வேண்டும் என்ற விஷயத்தை சொல்லுகின்றார். பழனிச்சாமியும் அங்கு வந்து தான் எதுவும் பண உதவி செய்ய வேண்டுமா என்று கேட்க, வேண்டாம் என்று பாக்கியா சொல்லுகின்றார்.

இறுதியாக ஜெனி செழியனுக்கு போன் பண்ணி ஆண்டிக்கு இப்படி பிரச்சனை இருக்குது நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கிறார். மேலும் சேவிங்கில் இருக்கும் பணத்தை எடுத்து கொடுக்குமாறு சொல்ல, அந்த நேரத்தில் செழியனை அழைத்து வேலையை விட்டு தூக்குகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement