• Jan 18 2025

ஃபர்ஸ்ட் போட்டோவ மட்டும் டெலிட் பண்ணுங்க..! தாய் வீட்டு நினைவுகளை பகிர்ந்த வனிதாவிடம் கெஞ்சிய ரசிகர்கள்?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். 

இவர் சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அதில் இவரது திருமண வாழ்க்கையும் அடங்கும். அதாவது முதலில் நடிகர் ஆகஷை வனிதா திருமணம் செய்து கொண்டார். 

ஆனால் சில வருடங்களிலேயே இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சில வருடங்களில் பிரிந்தார். 

இதை தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது சமையல் திறமையை காட்டி அசத்தியிருந்தார். மேலும் டைட்டில் வின்னர் பட்டத்தையும் அடித்தார். 

அதன்பின், பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவரும் நிலைக்கவில்லை, உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து, தனது மகளையும் பிரபலமாக்க வேண்டும் என்ற நோக்கில் பிக் பாஸ் சீசன் 7க்கு அனுப்பி வைத்தார். அத்துடன் ஜோவிகா பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆவதற்கு உரிய சில வேலைப்பாடுகளையும் வெளியில் இருந்து  செய்துள்ளார். ஆனாலும் அவர் ஒரு கட்டத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்த எவிட்டாகி வெளியே வந்து விட்டார்.

இதை தொடர்ந்து தற்போது ஃபோட்டோ ஷூட், மாடலிங் என்ற ரீதியில் தனது மகளுடன் ரொம்பவும் பிசியாக இருந்து வருகிறார் வனிதா.

இந்த நிலையில், தற்போது தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் அடக்க ஒடுக்கமாக சாரியுடன் இருக்கும் புகைப்படங்கள் பெரிதும் வைரலாகி வருகிறது.

குறித்த புகைப்படங்கள் தனது தாய் வீட்டில் இருக்கும் போது எடுத்துக் கொண்ட நினைவுகள் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை,அவர் வெளியிட்ட போட்டோக்களில் முதலாவதாக வெளியிட்ட போட்டோ சற்று கவர்ச்சியாக காணப்படுவதால் அதனை டெலிட் செய்யுமாறு அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement