• Nov 09 2024

அதீத சந்தோசத்தில் நாகார்ஜுனா குடும்பம்.. கர்ப்பமான சமந்தா..! களைகட்டிய வளைகாப்பு

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக காணப்படும் நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. நான்கு ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்டார்கள். தற்போது நாக சைதன்யா இரண்டாவதாக சோபிதா துலிபாலாவை திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளார். சமந்தா தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார்.

நாக சைதன்யா சமந்தாவின் விவாகரத்து பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டது. எனினும் இவர்கள் தங்களது பிரிவுக்கு பிறகு தத்தமது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். சமந்தா விவாகரத்துக்கு பிறகு ஆடிய ஊ  சொல்றியா மாமா என்ற பாடல் புகழின் உச்சிக்கே சென்றது. பிறகு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டு நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

சமந்தாவுடன் பிரிவுக்குப் பிறகு சில காலம் சிங்கிளாக இருந்த நாக சைதன்யா நடிகை  சோபித்தாவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் டேட்டிங் செல்லும் நிலைக்குப் போனது. இருவரும் வெளிநாடுகளில் டேட்டிங் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்டானது. இதை தொடர்ந்து கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


இந்த நிலையில், நடிகை சோபிதா துலிபாலாவின் தங்கை சமந்தா தற்போது கர்ப்பமாக உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதனை ஒட்டி அவருக்கான வளைகாப்பு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளதாம் இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

மேலும் சோபிதா தங்கள் வீட்டுக்கு மருமகளாக வரவுள்ள நிலையில், அவரது தங்கைக்கு நடந்த வளைகாப்பு தான் முதல் நல்ல விஷயம் என்ற செண்டிமெண்டில் நாகார்ஜுனா குடும்பம் ஹேப்பியாக கலந்துள்ளது.


Advertisement

Advertisement