• Dec 03 2024

மீண்டும் வீட்டில் உண்மையை மறைக்கும் செழியன்? பரிதாப சூழ்நிலையில் எழில்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், செழியன் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் வேலையில் இருந்து அவரை தூக்கி விடுகின்றார்கள். இதனால் வேறு வழியின்றி தனது ஐடி கார்டை கொடுத்துவிட்டு மிகவும் உடைந்து வெளியே வருகின்றார்.

இன்னொரு பக்கம் எழிலும்  பாக்கியா படும் கஷ்டத்தை நினைத்து அமிர்தாவிடம் புலம்புகின்றார். மேலும் 11 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் தன்னால் என்றும் தன்னால்  ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று சொல்லி புலம்புகின்றார். ஆனால் அமிர்தா எல்லாம் சரியாகும் என அவருக்கு நம்பிக்கை கொடுக்கின்றார்.

இதைத்தொடர்ந்து செழியன் கோபியின் ரெஸ்டாரண்டுக்கு வந்து நடந்தவற்றையெல்லாம் கோபியிடம் சொல்லி அழுகின்றார். கோபி அவருக்கு இதைவிட நல்ல வேலை  கிடைக்கும் என அட்வைஸ் பண்ணுகின்றார்.


அதன் பின்பு வீட்டில் ஈஸ்வரி சாப்பிடவில்லை என்று பாக்யா கவலைப்பட்டுக் கொண்டிருக்க, ஜெனி தனது நகைகளை எடுத்து அடகு வைத்துவிட்டு கடன் பிரச்சினையை கொடுக்குமாறு சொல்லுகின்றார். ஆனாலும் அப்படியெல்லாம் வேண்டாம் தான் நிச்சயம் இந்த பிரச்சனையை எப்படியாவது முடிப்பேன் என்று பாக்கியா சொல்கின்றார்.

அந்த நேரத்தில் செழியன் வந்து எதுவும் சொல்லாமல் உள்ளே செல்கின்றார். தனக்கு வேலை பரிபோன விஷயத்தை அவர் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் எழில் ப்ரொடியூசரை சந்தித்து தனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு கெஞ்சுகின்றார். ஆனாலும் அவர் தான் கொடுத்த வாய்ப்பை நீ ஒழுங்காக பயன்படுத்தவில்லை அதனால் உனக்கு வாய்ப்பு தர முடியாது என்று சொல்லுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement