• Jan 19 2025

ஹோட்டல் மாடியிலிருந்து தவறிவிழுந்த பிரபல பாப் பாடகர்! கோடி கணக்கான ரசிகர்கள் வேதனை

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

உலக அளவில் மிகவும் ஃபேமஸான பாப் பாடகர் தான் லியாம் பெய்ன். இவருக்கு என்றே  கோடிக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இவர் ஒன் டைரக்ஷன் எனப்படும் பாப் பேண்டில் முக்கிய நபராக காணப்படுகின்றார்.

உலக அளவில் பாப் இசைக்கன்றே ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். அப்படி அவர்களது பிரபலமான பேண்டில் ஒன்றுதான் 1டி எனப்படும் ஒன் டைரக்‌ஷன். இது கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டது . இதில் லியாம் பெய்ன், ஹாரிஸ் ஸ்டைல்ஸ், ஜெய்ன், லூயிஸ், நியால் ஹாரன் ஆகிய ஐந்து பேர் இருக்கிறார்கள் .

1993 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தவர் தான் லியாம் பெய்ன். இவர் முதலில் 2008 ஆம் ஆண்டு தி எக்ஸ் ஃபேக்டர் என்ற டெலிவிஷன் சீரிஸுக்காக ஆடிஷனில் கலந்துகொண்ட போதும் அதிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பின்பு ஒன் டைரக்‌ஷன் பேண்டில் சேர்ந்தார். எனினும் சில காலங்களில் அதிலிருந்தும் விலகி இருந்தார்.


இவர் கேத் கேசிடி என்பவரை காதலித்துவந்தார். கடந்த மாதம் 30 ஆம் தேதி இருவரும் ஆர்ஜென்டினாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அங்கு இரண்டு வாரங்கள் தங்கி இருந்து சுற்றிப் பார்த்து என்ஜாய் பண்ணி உள்ளார்கள். அதன் பிறகு 14 ஆம் தேதி அவருடைய காதலி சொந்த வேலை காரணமாக அங்கிருந்து புறப்பட்டார்.

இந்த நிலையில், போனோஸ் ஏர்ஸ் நகரத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் மூன்றாவது மாடியில் இருந்து பிரபல பாடகர்  லியாம் பெய்ன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தற்போது இவருடைய மரணம் கோடிக்கணக்கான ரசிகர்களை பாதித்துள்ளதோடு இசை துறைக்கு மிகப்பெரிய இழப்பாக காணப்படுகின்றது.

மேலும் இவருடைய மரணம் தவறி விழுந்து தான் நடைபெற்றதா? அல்லது ஏதேனும் கொலை முயற்சியில் நடைபெற்றதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றார்கள். தற்போது இவருடைய மரணத்திற்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றார்கள். 

Advertisement

Advertisement