• Jan 19 2025

மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரின் லைசென்ஸை ரத்து செய்த போலீசார்! காரணம் என்ன தெரியுமா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் தமிழிலும் சக்கை போடு போட்டது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் தான் ஸ்ரீநாத் பாஸி.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்கள் அத்தனையும் தோல்வியை தழுவின. விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை எந்த படமும் பெறாமல் இருந்தது. இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழ் திரைத் உலகினருக்கே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

ஆரம்பத்தில் வெளியான கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சாப்டர் ஒன் போன்ற பல படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. அத்துடன் வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் இணையத்தில் படு பேமஸ் ஆனது. எங்கு பார்த்தாலும் இந்த படம் பற்றிய பேச்சு தான் காணப்பட்டது.

அதன்படி மஞ்சுமெல் பாய்ஸ் விமர்சன  ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. சுமார் 276 கோடி வசூலை பெற்றதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. எனினும் சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சில சர்ச்சைகளில் சிக்கினார்.


இந்த நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸியின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மட்டாஞ்சேரி பகுதியில்  காரில் சென்ற நபர் ஒருவரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளார் ஸ்ரீநாத்.  இதனால் புகார் அளித்தது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அதன் பின்பு ஜாமனில் வந்தவரின் ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்து அலுவலகர் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். இதனால் ஒரு மாதத்திற்கு வாகனங்களை இயக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement