• Jan 19 2025

விஜய் டிவி சீரியல் நடிகை கோமதிக்கு திடீரென என்னாச்சு? ஷூட்டிங் ஸ்பாட்டில் அசம்பாவிதம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.  இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கோமதி என்ற கேரக்டரில் நடிப்பவர் தான் நடிகை நிரோஷினி. 

தமிழ் திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான அக்னி நட்சத்திரம், என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிரோஷா, அதன் பின்னர் கமல்ஹாசனுடன் சூரசம்ஹாரம், விஜயகாந்துடன் செந்தூரப்பூவே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் , கன்னடம் போன்ற  மொழி படங்களிலும் நடித்தார். தற்போது சீரியல் களமிறங்கியுள்ளார். குறிப்பாக சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நளினியுடன் இணைந்து நடித்தார். அந்த கேரக்டரின் மூலம் மிகவும் பிரபலமானார்.


இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிக்கும் நிரோஷினிக்கு திடீரென என்ன ஆச்சு என ரசிகர்கள் கேட்டு  வருகின்றார்கள். அதாவது இந்த சீரியலில் மகன் கேரக்டரில் நடிக்கும் கதிரவேல் அவரை தூக்கிக் கொண்டு வந்த வீடியோவை  அவரது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கோமதிக்கு என்ன நடந்தது என வினவி வருகிறார்கள்.

அவருக்கு முதுகு வலி என்றும் அதனால் தான் அவரைத் தூக்கி வந்ததாகவும் கூறப்பட்டது. தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement