சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. புஷ்பா படத்தின் முதலாவது பாகத்தைப் போலவே இந்த பாகமும் ஹிட்டடிக்கும் என்று அல்லுவின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றார்கள். இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அல்லு அர்ஜுன். இவர் மிகவும் பேமஸ் ஆக இருந்தாலும் தென்னிந்திய அளவில் பெரிதளவில் கவனம் ஈர்க்காமல் இருந்தார். ஆனால் அதன் பின்பு சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்தார். அந்த படம் பான் இந்திய அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. தற்போது பான் இந்திய ஸ்டார் ஆக அல்லு அர்ஜுன் காணப்படுகின்றார்.
புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தொடர்பிலான அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் சூட்டிங் வெளிநாடுகளிலும் மும்முரமாக நடந்தது. இந்த படத்தில் இருந்து வெளியான கிளிம்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் படம் எப்போது வெளியாகும் என ஆர்வமாக உள்ளார்கள்.

இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் ப்ரீ பிஸ்னெஸ் மட்டுமே சுமார் 900 கோடி ரூபாய் நடந்திருப்பதாக கூறப்படுகின்றது.
அதாவது இந்த படத்தில் ஓடிடி ரைட்ஸ் நெட்பிக்ஸ் நிறுவனத்திடம் 270 கோடி ரூபாய்க்கு விலை போய் உள்ளது. மேலும் டிஜிட்டல் ரைட்ஸ், சேட்டிலைட் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் சுமார் 650 கோடிக்கு விற்பனை ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _69018ba7ea1f8.jpeg) 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!