அண்மையில் நடைபெற்ற வணங்கான் பாலா25 நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
குறிப்பாக சூர்யா,சிவகுமார்,சிவகார்த்திகேயன் என பலரும் வந்திருந்தனர்.கங்குவா திரைப்படத்தின் தோல்வியினால் மிகவும் கவலையுடன் இருந்த சூர்யாவினை குறித்த நிகழ்வில் பார்த்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் சிவகார்த்திகேயன் மேடையில் பேசும்போது முன்னாள் உட்கார்ந்திருந்த சூர்யா அவர்களை மதிக்காமல் தனது உரையாடலினை தொடர்ந்துள்ளதாகவும் தற்போது வதந்திகள் பரவி வருகின்றது.
அது மட்டுமல்லாமல் சூர்யா குறித்த நிகழ்ச்சியில் முதலாவதாக உரையாடிவிட்டு ஒரு பாதையின் வழியே வெளியேறியதும் இன்னொரு பாதை வழியாக சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிக்குள் வந்துள்ளதாகவும் ஆனால் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு குழு எடிட்டிங்கின் மூலம் சூர்யா நிகழ்ச்சி முழுவதும் இருப்பது போல் காட்டியுள்ளதாகவும் தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது.
Listen News!