• Jan 19 2025

மனோஜ்- ரோஹினியை ஹாலில் படுக்க வைத்த பாட்டி.. ஸ்ருதியை வைத்து மாஸ்டர் பிளான்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது முன்னோட்ட வீடியோக்கள் வந்து இந்த சீரியலின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்று முன் புதிய முன்னோட்ட வீடியோ வந்துள்ள நிலையில் இந்த வீடியோவில் ரூம் பிரச்சனை குறித்து பாட்டியிடம் முறையிடுகிறார்கள். அதற்கு பாட்டி ஒரு தீர்வு சொல்கிறார். அண்ணாமலை - விஜயா தங்கும் ரூம் போக மீதமுள்ள இரண்டு ரூம்களில் மூன்று ஜோடிகள் மாறி மாறி தங்கி கொள்ளட்டும் என்றும், ஒவ்வொரு வாரமும் ஒரு ஜோடி ஹாலில் படுத்து கொள்ளட்டும் என்றும் அவர் கூறுகிறார்.



அதன்படி முதல் வாரம் ரோஹிணி மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் ஹாலில் படுத்துக் கொள்கின்றனர். அப்போது மனோஜ் தனக்கு தூக்கமே வரவில்லை என்று கூற. அதற்கு ரோஹிணி இதற்கு அடுத்த வாரம் கண்டிப்பாக இதற்கு தீர்வு கிடைத்து விடும் என்று கூறுகிறார்.

அப்போது மனோஜ் எப்படி என்று கேட்க, அடுத்த வாரம் ஸ்ருதி - ரவி வெளியே படுப்பார்கள், கண்டிப்பாக ஸ்ருதி அப்போது பிரச்சனை செய்வார், அப்போது நமக்கும் சேர்ந்து ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று வில்லத்தனமாக ரோஹிணி கூறும் காட்சிகளுடன் இந்த முன்னோட்ட வீடியோ முடிவுக்கு வருகிறது.

பாட்டியின் இந்த ரூம் பிரச்சனை தீர்வுக்கு ஸ்ருதி பிரச்சனை செய்வாரா? அல்லது இதை எளிதாக எடுத்துக்கொண்டு கடந்து விடுவாரா? ரோஹினியின் சதி திட்டம் பலிக்குமா? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்ப்போம்.

Advertisement

Advertisement