• Jan 19 2025

இந்தியன் தாத்தாவை கலாய்த்த ப்ளூ சட்டை மாறனுக்கு ஒரே போடாய் போட்ட சங்கர்... வைரல் பதிவு

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

இந்தியன் 2 படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இதில் கமலின் நடிப்பும் அவரின் கெட்டப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்தியன் 2 படத்தின் டிரைலரை பார்த்த நெட்டிசன்கள், இந்தியன் தாத்தாவை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என கலாய்த்து வருவதோடு, ப்ளூ சட்டை மாறனும் 106 வயதாகும் இந்தியன் தாத்தா ஏரில் பறந்து பறந்து அடிப்பாரா என கலாய்த்து தள்ளியுள்ளார்.

இந்த நிலையில், இந்தியன் தாத்தாவின் வயது என்ன என்ற கேள்விக்கு தற்போது ஷங்கர் பதில் அளித்துள்ளார். மேலும் கமலஹாசனும் இந்தியன் தாத்தாவின் வயது குறித்து பேசி உள்ளார்.


அதன்படி சீனாவில் உள்ள தற்காப்பு கலை மாஸ்டர் லூசிலியான் 120 வயதிலும் மார்ஷியல் அட்ரஸை பெர்ஃபார்ம் செய்துள்ளார். இந்தியன் தாத்தாவை வர்மக் கலையின் தலைசிறந்த மாஸ்டராக காட்டியுள்ளனர். அதனால் அவரால் 106 வயதிலும் சண்டை போட முடியும் என விளக்கம் கொடுத்துள்ளார் சங்கர் .

மேலும் 120 வயதிலும் நான் நடிப்பேன் என கமலஹாசன் கூறியுள்ளதும் தற்போது வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement