• Jan 02 2025

பூட்டப்பட்ட அறையில் சடலமாக மீட்கப்பட்ட சீரியல் நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

மலையாள சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் திலீப் சங்கர் ஹோட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு  அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

50 வயதான நடிகர் திலீப் சங்கர் கடந்த 19ஆம் தேதி படப்பிடிப்பு காரணமாக ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் அவரை இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது அறைக்கு வெளியே ஹோட்டல் ஊழியர்கள் பார்த்துள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் மற்றும் சீரியல் குழுவினர்களிடமிருந்து பலமுறை தொலைபேசி அழைப்புகள் எடுக்கப்பட்ட போதும் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் கொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஹோட்டல் ரூம் கதவின் அறையை உடைத்த நிலையில், அவர் உயிரற்று  இருந்தது தெரிய வந்துள்ளது. குறித்த அறை உள்ளிருந்து பூட்டப்பட்டுள்ளது. இந்த மரணம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்பட்டது.

நடிகர் திலீப் ஷங்கரின் மரணத்திற்கான காரணம் உள் ரத்தப்போக்கு, கீழே விழுந்த பின்னர் தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள். அத்துடன் இவர் கல்லீரல் தொடர்பான உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement