• Jul 12 2025

நண்பேன்டா கூட்டணியில் உருவாகப்போகும் "டிடி ரிட்டேன்ஸ்" இன் தொடர்ச்சி.

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

கடந்தாண்டு வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்ற சந்தானத்தின் "டிடி ரிட்டேன்ஸ்" படமானது இயக்குனர் எஸ்.பிரேம் ஆனந்த்  அவர்களால் இயக்கப்பட்டது.விமர்சன மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

Image

முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.பிரேம் ஆனந்த்  இயக்க சந்தானம் முன்னணி கதாபாத்திரத்திலும் மேலும் பல உச்ச நட்சத்திரங்கள் துணை கதாபத்திரங்களிலும் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகும் இப் படத்தில் முக்கிய தயாரிப்பாளராக இணைத்துள்ளார் நடிகர் ஆர்யா.

Image

இதுகுறித்து திரைத்துறையினர் பேசுகையில் நண்பேன்டா கூட்டணியில் உருவாகும் இப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதென குறிப்பிட்டுளனர்."டிடி ரிட்டேன்ஸ்" அடுத்த பாகத்தின் பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஆர்யா மற்றும் நடிகர் சந்தானத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement