• Jan 19 2025

காமெடியில் கலக்க காத்திருக்கும் ரவுடி பேபி..? யாராவது சான்ஸ் குடுங்கப்பா..

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் பட்டித் தொட்டி  எங்கும் பிரபலமானவர் தான் சாய் பல்லவி. இந்த படத்தில்  கிடைத்த ரீச்சால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பலமொழிகளிலும் பெரிய இடத்தை பிடித்தார்.

தமிழில் வெளியான மாரி படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் பாலிவுட் நடிகரான அமீர்கானின் மகனுடனும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் சாய்பல்லவி. அது மட்டுமின்றி பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் படத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்து வருகின்றார். அண்மையில் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படங்கள் பெரிதும் ரசிகர்களால் கவரப்பட்டன.


இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சாய்பல்லவி கூறுகையில், நடன திறமையை வெளிக்காட்டும் படியும் கதைக்கு முக்கியமான பாத்திரங்களில் நடித்தாலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமான படத்தில் நடிப்பதற்கான ஆவலுடன் காத்திருக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் முழுமையான காமெடி கதாபாத்திரம் எந்த மொழியில் கிடைத்தாலும் உடனே நடிக்க சம்மதம் தெரிவிப்பேன் என ஓப்பனாக கூறியுள்ளார் .

Advertisement

Advertisement