• Jul 12 2025

3400 மணி நேரத்தை சுற்றிக் கட்டிய தீபிகா படுகோன்.. விலையை கேட்டா சும்மா தலையே சுத்திடும்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழும் தீபிகா படுகோன், தற்போது கர்ப்பமாக இருக்கின்றார் என்பது யாவரும் அறிந்த ஒன்று. வயிற்றில் குழந்தை இருக்கும் போதே கல்கி 28 98 ஏடி படத்திலும் நடித்ததோடு, அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்தார் தீபிகா படுகோன்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பிணிகள் செய்ய வேண்டிய யோகாசனம் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறிப்புகளையும் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில், எம்பிராய்டரி புடவையில் இருக்கும் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் தீபிகா படுகோன்.


அதாவது ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்டின் சங்கீத் விழாவுக்கு சென்றிருந்த தீபிகா படுகோன், அணிந்த ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தோராணி என்ற பிராண்டின்  'ஹுக்கும் கி ராணி' என்ற புடவையை அணிந்திருந்தார் தீபிகா. இந்த புடவையின் விலை சுமார் 1.92 லட்சம் என கூறப்படுகிறது. இவ்வாறு ப்ளூ கலரில் ரீகல் ஹேண்ட்ஸ்பன்-ஆர்கன்சா புடவையை தீபிகா அணிந்திருந்தார்.

அது மட்டுமின்றி தீபிகா படுகோன் அணிந்திருந்த புடவையை உருவாக்க சுமார் 3400 மணி நேரம் ஆகியுள்ளதாம். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement