• Jan 19 2025

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் ஈழத்து குயில் கில்மிஷா! அரங்கமே அதிர்ந்த நெகிழ்ச்சியான தருணம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான ஷோ தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ். இது தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது. 

இம்முறை  லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3  இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.

இதில் பங்கேற்ற குழந்தைகளின் திறமையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முறையில் இறுதிவரை நகர்த்திச் சென்றுள்ளனர். 


அதன்படி, இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தில் கால் பதித்துள்ளதோடு, ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் பைனலுக்கு தேர்வாகி இருந்தனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற கிராண்ட் பைனலில் இறுதி முடிவு வெளியாகியுள்ளது.


அதன்படி, சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னராக ஈழத்து குயில் கில்மிஷா அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் ரன்னராக ருத்ரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து,  அரங்கம் முழுவதும் அதிர தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

இதேவேளை, அசானி பைனலில் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும் கில்மிஷா டைட்டிலை ஜெய்த்து இருப்பது ஆறுதலை தந்திருக்கிறது என்றும் பலர் கருத்து கூறி வருகிறார்கள். அதோடு டைட்டில் ஜெயித்த கில்மிஷாவிற்கு 10 லட்சம் ரூபாய் காசோலை கொடுக்கப்பட்டிருக்கிறது.


 

Advertisement

Advertisement