• Jan 18 2025

பிக்பாஸ் கூல் சுரேஷுக்கு மாலை அணிவித்து பிரமாண்டமான வரவேற்பு! அலைமோதிய ரசிகர் கூட்டம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் ஆரம்பத்தில் மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 77 நாட்களைக் கடந்து  ஒளிபரப்பாகி வருகிறது. 

பிக் பாஸ் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் கூல் சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் நாயகனாக கொண்டாடப்படுபவர். 

இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை இருப்பினும் சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் தனது நகைச்சுவையான வசனங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாக அறியப்படுகிறார்.



பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கூல் சுரேஷ் தனது நகைச்சுவை மூலம் சக போட்டியாளர்களை கலகலப்பாக வைத்திருந்ததோடு, தானும் வைக்கப்பட்ட டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடி வந்தார்.

எனினும், கடந்த வாரம் கூல் சுரேஷ்க்கு தனது வீட்டின் நினைவு வரவே பிக் பாஸ் வீட்டின் சுவர் ஏறி வெளிய செல்லத் துணித்துள்ளார்.

இதை தொடர்ந்து இந்த வாரம் அவரின் விருப்பப் படியே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கூல் சுரேஷுக்கு அவரது நண்பர்கள் அமோக வரவேற்பை கொடுத்துள்ளனர்.

அதன்படி, அவருக்கு மாலை, அணிவித்து பொன்னாடை போர்த்தி அவரை வேற லெவலில் வாழ்த்தி உள்ளனர். தற்போது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement