• Jan 19 2025

தனது வெற்றியை தாய் மண்ணுக்கு சமர்ப்பித்த கில்மிஷா! இது போர்தொடுத்த வெற்றி... கொண்டாடும் உலக தமிழர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான ஷோ தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ். இதில் தற்போது ஈழத்து குயில் கில்மிஷா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

இம்முறை  லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3  இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதன்  இறுதிக் கட்டத்தில் ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் பைனலுக்கு தேர்வாகி இருந்தனர்.

இதில் பங்குபற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா.


இவரது இயற்கையான குரல் வளத்தைக் கேட்டு மெய் மறக்காதவர்கள் யாரும் இல்லை எனலாம். அவ்வாறு அவரின் பாடும் திறமை பலராலும் வியக்கப்பட்டு பாராட்டப்பட்டது.

இன்றைய தினம் இடம்பெற்ற சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3ன் கிராண்ட் பைனலில் வெற்றிக் கின்னத்தை தட்டிச் சென்றுள்ளார் கில்மிஷா.

இந்த நிலையில், தனது வெற்றியை தன் மண்ணுக்கு சமர்ப்பித்ததோடு, ஈழத்தில் உயிர் நீத்த எம் உறவுகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளார். இதனை தனது முகநூலில் பதிவிட்டு தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு, தனது வெற்றியிலும் தாய் மண்ணையும் தாய் மண்ணுக்காக உயிர் நீத்த உறவுகளையும் நினைவு கொண்டு, பகிந்த கில்மிஷாவின் பெருந் தன்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, கில்மிஷாவின் வெற்றியை தம் வீட்டுப் பிள்ளையின் வெற்றியாக இலங்கை மக்கள் மட்டுமின்றி உலக தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர்.

>இதேவேளை, அவரது மாமாவும் ஈழப் போராட்டத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement