சிறந்த குணச்சித்திர நடிகரான சமுத்திரகனி நடிப்பை தாண்டி பல படங்களையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சமுத்திரக்கனி சென்னைக்கு வந்த இளமை நாட்களில் தனக்கு நடந்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
15 வயசு இருக்கும்போது நான் சென்னைக்கு வந்துட்டேன். அரை டவுசர் போட்டுகிட்டு சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு பஸ் ஏறிட்டேன். ஆனா எங்க இறங்கணும்னு தெரியல. கடைசில எல்.ஐ.சி-ல இறங்குனேன். கையில ஒரு டயரி மட்டும் வச்சிருந்தேன். அதுல சினிமாவில இருக்கக்கூடிய ஒரு நாலு, ஐந்து இயக்குநர்கள், நடிகர்களோட அட்ரஸ் மட்டும்தான் இருக்கு.
ரொம்ப பசிக்குது. தி.நகர் எந்தப் பக்கம்னு கேட்டேன். அப்படியே நடந்துபோகும்போது ஒரு வயசான பாட்டி இட்லி வித்துட்டு இருந்தாங்க. காசு வாங்காம அந்த பாட்டி சாப்பிடக் கொடுத்தாங்க. அண்ணா மேம்பாலத்துக்குக் கீழ படுத்துட்டேன். போலீஸ் காரவுங்க வந்து எல்லாரையும் எழுப்பி விடுறாங்க. நான் தூங்குற மாதிரி நடிக்கிறேன். என்ன எழுப்பி எதுக்கு இங்க வந்துருக்க அப்படின்னு கேட்டாங்க. நடிக்கலாம்னு வந்திருக்கேன்னு சொன்னேன்.
இங்க படுத்திருந்தா எப்படி நடிப்ப, சரி வா என் கூட அப்டின்னு சைக்கிள்ல பின்னாடி உட்கார வைச்சு கூட்டிட்டு போனாரு ஒரு ஏட்டைய்யா. மவுன்ட் ரோட்டுல இருக்குற ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல என்னைய படுக்க வச்சாரு. ஏன் என்னுடைய கதைகள்-ல நல்ல மனுஷங்க இருக்காங்கன்னா இந்த மாதிரி நல்லவங்களாலத்தான் இந்த உலகம் இயங்கிகிட்டு இருக்கு. யாரையும் பார்த்து பயப்படாதீங்க. சந்தோஷமா இருங்க. உங்களுக்கு பிடிச்ச வேலைய செய்யுங்க" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
Listen News!