• Jan 07 2026

விஜய் Vs சிவகார்த்திகேயன்.. பராசக்தி பேனர் கிழித்த சம்பவம் குறித்து ப்ளூ சட்டைமாறன்

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 2026 ஆம் ஆண்டு தொடக்கம் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கியுள்ளது. ஜனவரி 9ம் தேதி விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படமும், ஜனவரி 10ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இதன் காரணமாக, “விஜய் Vs சிவகார்த்திகேயன்” என்ற பெரிய போட்டி 2026ன் ஆரம்பத்திலேயே உருவாகியுள்ளது.

இதுவரை, யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சகட்டத்தில் உள்ளது. சமூக வலைத்தளங்கள், திரைப்பட விமர்சகர்கள் அனைவரும் இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் நாள் மற்றும் Box Office விபரம் பற்றி ஆர்வமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.


இந்த வரவேற்பு சூழலில், சமீபத்தில் மதுரையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதுரையில் உள்ள Ritzy தியேட்டர்-க்கு ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டிற்காக சென்ற விஜய் ரசிகர்கள், அங்கு பராசக்தி படத்தின் பேனரை கிழித்து எறிந்த சம்பவம் பதிவாகியிருந்தது.

இந்த சம்பவத்தின் போது, தியேட்டரில் பராசக்தி படத்தின் பெரிய பேனர் கிழிக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்களிடையே கலகம் ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ப்ளூ சட்டை மாறன் (Blue Shirt Maran) தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,“மதுரை Ritzy தியேட்டரில் பராசக்தி பேனரை கிழித்து எறிந்த விஜய் ரசிகர்கள். திரைப்படம் பார்ப்பதை போர் அனுபவம் போல மாற்றாது தடுக்க வேண்டியது அரசு மற்றும் திரையரங்க நிர்வாகத்தின் பொறுப்பு. இல்லாவிட்டால் இம்முறை போக்கிரி பொங்கல் தான்.” என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement