• Jan 18 2025

விஜே விஷாலுக்கு கல்யாணம்! காதலி யார் தெரியுமா! பாக்கியாவின் மருமகளா?

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பலரால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பாக்யாவின் மருமகளாக இருக்கும் அமிர்தா என்கிற அக்ஷிதா, பிக் பாஸ் போட்டியாளர் ஒருவரை காதலிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.


அந்த போட்டியாளரும் வேறு யாரும் இல்லை பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மகனாக எழில் கதாபாத்திரத்தில் முன்னர் நடித்த VJவிஷால் தான். அந்த வகையில் விஷால் மற்றும் அக்ஷிதா இருவரும் சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வரும் பொழுது இவர்களுடைய புரிதல் ஒத்துப்போனதால் அங்கே காதல் மலர்ந்து விட்டது.


அப்பொழுது VJ விஷாலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து கொஞ்சம் வெளியேறி பிக் பாஸ்க்கு முயற்சி எடுக்கலாம் என்று அவசரமாக நாடகத்தை விட்டு வெளியேறினார். அதன்படி தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நுழைந்த விஜே விஷால், அக்ஷிதாவை காதலித்து வருவதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.


பிக் பாஸ் சீசனை முடித்துவிட்டு வெளியேறிய  பிறகு விஜே விஷாலுக்கும் அக்ஷிதாவுக்கும் திருமணம் நடைபெறும். அதற்குள் பாக்கியலட்சுமி சீரியலும் முடிவுக்கு வந்துவிடும். அதன் பின்னரே இவர்களுக்கு திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. 


Advertisement

Advertisement