• Jan 27 2025

ரயான், விஷ்ணு பத்தி தப்பா பேசாதீங்க..! பிக்பாஸ் சௌந்தர்யா வெளியிட்ட திடீர் ட்விட்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ஒன்றின் மூலம் மக்கள் மத்தியில் பேசப்பட்டவர் தான் சௌந்தர்யா. அதில் பார்ப்பதற்கு ஆண்களின் தோற்றத்தில் காணப்பட்டார். எனினும் அவருடைய குரலே அவருக்கு எதிரியாக காணப்பட்டது

இதை தொடர்ந்து 90எம்எல் என்ற படத்தில் நடித்து சினிமாவிலும் காலடி பதித்தார். அதன் பின்பு தர்பார், ஆதித்ய வர்மா, காலங்களில் அவள் வசந்தம் போன்ற  படங்களில் தொடர்ச்சியாக நடித்த சௌந்தர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய வெப் சீரிஸ் தான் 'வேற மாதிரி ஆபீஸ்'.

d_i_a

2023 ஆம் ஆண்டு ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான வேற மாதிரி ஆபீஸ் என்ற வெப் சீரிஸில் சௌந்தர்யா, விஷ்ணு விஜய் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இதன் போதே சௌந்தர்யாவுக்கு மிகப்பெரிய ஃபேன்ஸ் பேஜ் உருவானது. 


இதை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பங்கு பற்றி இரண்டாவது இடத்தை தட்டிச் சென்றார். மேலும் பிக்பாஸில் யாருமே எதிர்பார்க்காத வகையில் விஷ்ணுவுக்கு தனது காதலை தெரிவித்து இருந்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததோடு இந்த வருடத்திற்குள்ளேயே சௌந்தர்யாவை திருமணம் முடிப்பதாக பேட்டி கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், சௌந்தர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரயான், விஷ்ணு பற்றி தவறான கருத்துக்கள் பரப்புவதை தவிர்க்குமாறு அன்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார். 


அதன்படி அவர் கூறுகையில், நான் பழைய போஸ்டர்கள் சிலதை கவனித்தேன். அவை தேவையற்ற நெகட்டிவ் விமர்சனங்களை ஏற்படுத்துகின்றன. இது எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் ரயானும் விஷ்ணுவும் எனக்கு முக்கியமானவர்கள்.

அவர்கள் மீது தங்களுடைய வெறுப்பையும் நெகட்டிவ் விமர்சனங்களையும் பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். மேலும் இன்னொருவர் மீது ஆதரவு அளிப்பதையும் அன்பு செலுத்துவதையும் கவனியுங்கள். எனக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement