• Oct 18 2024

பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் மிஷ்கின்.. வேற லெவலில் ஒரு கலக்கல் திரைப்படம்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படத்தில் முதன் முதலாக மிஷ்கின் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதிப் ரங்கநாதன் அதன்பின் ’லவ் டுடே’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தபின் தமிழ் திரையுலகின் முன்னணி இடத்தை பிடித்து விட்டார்.

இதையடுத்து தற்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’எல்ஐசி’ மற்றும் ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ’டிராகன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் ’டிராகன்’ திரைப்படத்தில் தற்போது மிஷ்கின் இணைந்திருப்பதாகவும் கிட்டத்தட்ட வில்லன் கேரக்டரில் மிஷ்கின் இந்த படத்தில் நடிக்க இருப்பதால் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மிஷ்கின் மோதும் காட்சிகளும் இந்த படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வேற லெவலில் இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

காமெடி நடிப்பில் கலக்கும் பிரதீப் ரங்கநாதன், நக்கலான வில்லன் இடத்தில் நடிக்கும் மிஷ்கின் ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைவதால் இந்த படத்திற்கு இப்போது எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement