• Jan 19 2025

மீனா மாதிரி அமைதியா இருப்பேன்னு பாத்தியா? தொலைச்சுபிடுவேன்: விஜயாவை மிரட்டும் ரோகிணி..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரோகிணி தான் சொன்ன பொய்யிலிருந்து சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியில் ரோகிணி தந்தை வரவில்லை என்று விஜயா கோபத்தில் இருக்கும் நிலையில் அடுத்த வாரம் வரும் எபிசோடுகளில் ரோகிணி உண்மை  சொரூபம் தெரிய வாய்ப்பிருப்பதாகவும் இதனால் ரோகிணியையும் மீனாபோல் விஜயா நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் மீனா மாதிரி ரோகிணி அமைதியாக இருக்காமல் எதிர்த்து பேச இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. ரோகிணியை விஜயா திட்டும்போது ’நான் மீனா மாதிரி அமைதியாக இருப்பேன் என்று நினைத்துக் கொண்டிருக்காதீர்கள், எங்க அப்பா வரவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?  என்னை மரியாதை குறைவாக நடத்தினால் நடக்கிறது வேறு’ என்று கூறும் காட்சிகள் வர இருப்பதாகவும்  அதுமட்டுமின்றி மனோஜிடம் ’நாம் இருவரும் தனியாக போய்விடலாம், உங்களுக்கு மனைவி வேண்டுமென்றால் என்னுடன் வாருங்கள், இல்லை அம்மா தான் வேண்டுமென்றால் இங்கேயே இருந்து கொள்ளுங்கள்’ என்று கோபமாக பேசிவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ரோகிணியை அண்ணாமலை சமாதானப்படுத்த முயற்சி போது முயற்சித்த போது ’உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது, ஆனால் அத்தை மீது எனக்கு சுத்தமாக நல்ல அபிப்பிராயம் இல்லை, எப்ப பார்த்தாலும் பணம், பணம்ன்னே இருக்காங்க, எனவே என்னால் இந்த வீட்டில் தொடர்ந்து வாழ முடியாது’ என்று கூறிவிட்டு செல்வது போன்ற காட்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று தான் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் பார்வையாளர்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும் ’சிறகடிக்க ஆசை’ கதைக்குழுவினர் எப்படி இந்த சீரியலை கொண்டு போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement