கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மே மாதம் முதலாம் திகதி வெளியாகவுள்ள இப் படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவரும் நிலையில் தற்போது இயக்குநர் படம் குறித்து தனது x தளத்தில் ஒரு செய்தியினை வழங்கியுள்ளார்.
அதாவது படத்தின் முதல் பாடல் 'கண்ணடி பூவே' நாளை வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பாடலின் வெளியீட்டுக்கு முன்பு 'கண்ணடி பூவே' என்ற பாடலின் 40 வினாடிகள் கொண்ட ப்ரோமோவை திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
“காதல் மருந்திலிருந்து ஒரு சிறிய மாத்திரை...நீங்கள் அனைவரும் மந்திரத்தைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்ற பகுதியுடன் தனது ப்ரோமோவினை பகிர்ந்த கார்த்திக் பாடலின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளார்.மற்றும் இப் பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளதுடன் சந்தோஷ் இசையமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
A little pill from the Love Drug...❤️🔥
Can't wait for u all to listen to the magic @Music_Santhosh and @Lyricist_Vivek have created. #KannadiPoove 1st single from #Retro dropping tomorrow at 5pm #RetroFromMay1 #LoveLaughterWar pic.twitter.com/oSV5Jg9dQb
Listen News!