• Apr 01 2025

சூர்யாவின் பரிசுத்த காதல் கதை இதுதானா? கார்த்திக் சுப்புராஜ் பலே திட்டம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில்  இறுதியாக கங்குவா திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் எப்படியாவது ஹிட் படம் கொடுக்க வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் உடன் கூட்டணி வைத்துள்ளார் சூர்யா. தற்பொழுது அவருடைய இயக்கத்தில் ரெட்ரோ படம் உருவாகி வருகின்றது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  நடித்துள்ளார். மேலும் சூர்யாவின் 45 ஆவது படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகின்றார். இந்த படத்தை ஆர். ஜே பாலாஜி இயக்குகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ரெட்ரோ படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றதாம். இந்த படம் மே முதலாம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படங்கள் அதிகளவானவை அதிரடி ஆக்சன் படமாகவே காணப்படும்.


ஆனால் சூர்யாவை வைத்து இயக்கும் ரெட்ரோ திரைப்படம் காதல் கதையை மையமாகக் கொண்டு நகர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிக அளவில் காணப்படுகின்றது. இந்த படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வருவார் என நம்பப்படுகின்றது.

இந்த நிலையில், சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் கதை என்னவென்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி காதல் மனைவிக்காக ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்தை விடும் கேங்ஸ்டர் தலைவனாக ரெட்ரோ படத்தில் சூர்யா நடித்துள்ளார்.

இந்த படத்தின் கதையை போலவே ஏற்கனவே மாரி, அமர்க்களம், பீமா போன்ற கதைகள் வெளியாகி உள்ளன. இந்த கதையும் அதனுடனே ஒத்துப் போகின்றது. ஆனாலும் கார்த்திக் சுப்புராஜ் இதையே செதுக்கி சூர்யாவுக்கு ஒரு வெற்றிப் படம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement