கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றது. இந்த நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் ஒரு மாதமே மீதமாக உள்ளது. இருப்பினும் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்பதை தற்போது வரை கணிக்க முடியவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர். இவர்களிடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகின்றது. அத்துடன் சண்டை, சச்சரவு, வஞ்சகம் என அத்தனையும் சக போட்டியாளர்கள் இடையே வெளிக்காட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் விதிப்படி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வீட்டு தலையாக இருப்பார். அதற்காக ஒரு போட்டியாளர் தேர்வு செய்யப்படுவார். அவர் தான் அந்த வீட்டை வாரம் முழுவதும் நிர்வகிக்க வேண்டும். வீட்டில் என்ன பிரச்சனை நடந்தாலும் வீட்டு தலை தான் தீர்வு காண வேண்டும். மேலும் அவர்களுக்கு நாமினேஷனில் தப்பிக்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.

அந்த வகையில் இந்த வாரம் கானா வினோத் வீட்டு தலை ஆகியுள்ளார். இந்த வாரத்திற்கு ஆன ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. அதில் விதவிதமான பெயிண்ட்களும் வைக்கப்பட்டன.
மேலும் தாங்கள் நாமினேஷன் செய்ய விரும்பும் போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து காரணத்துடன் அவரை நாமினேட் செய்து, அவர்களுடைய முகத்தில் பெயிண்டை பூச வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்தார்.
அதன்படி ஒவ்வொருவரும் காரணத்தை சொல்லி இருவரை நாமினேட் செய்தனர். இந்த நாமினேஷனின் முடிவில் இந்த வாரம் கானா வினோத் தவிர எஞ்சியுள்ள 11போட்டியாளர்களும் நாமினேட் ஆகி இருக்கின்றார்கள்.
Listen News!