• Dec 17 2025

‘ஜனநாயகன்’ ரன் டைம் வதந்தியா.? உண்மையை உடைத்த வலைப்பேச்சு பிஸ்மி.! ஷாக்கில் ரசிகர்கள்

subiththira / 18 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக நீண்ட காலமாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள தளபதி விஜய், தனது திரை வாழ்க்கையின் கடைசி படமாக கருதப்படும் “ஜனநாயகன்” படத்தின் மூலம் ரசிகர்களை மீண்டும் ஒரு முறை உற்சாகத்தில் ஆழ்த்தவுள்ளார்.

பிரபல இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், விஜய்யின் இறுதிப் படம் என்பதால், வெளியீட்டுக்கு முன்பே அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், சமீபத்தில் “ஜனநாயகன்” படத்தின் ரன் டைம் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக, இப்படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகரான வலைப்பேச்சு பிஸ்மி, இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி, தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.


அவர் கூறியதாவது, “ஜனநாயகன் படத்தின் மொத்த ரன் டைம் 3 மணி நேரம் 6 நிமிடம் என்றெல்லாம் பரவி வருவது முற்றிலும் வதந்தி. இந்த நேரமே படத்தின் வெற்றிக்கு தடையாக இருக்கும். இன்னைக்கு இரவு தான் படத்தோட இறுதி ரன் டைமை முடிவு பண்ணப்போறாங்க. அதுவும் இயக்குநர் ஹெச். வினோத் இன்னும் நேரத்தை ஃபைனல் பண்ணல.” என்று தெரிவித்துள்ளார்.

பிஸ்மியின் இந்த விளக்கம் மூலம், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ரன் டைம் தகவல்கள் அதிகாரபூர்வமல்ல என்பதனை தெளிவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement