• Dec 17 2025

விஜய்யின் அரசியல் வருகையால் மாணவர்கள் மனநிலை மாறிடுச்சு.! – நடிகர் ஷாம் அதிரடிக் கருத்து

subiththira / 19 hours ago

Advertisement

Listen News!

நடிகர் ஷாம் சமீபத்தில் விஜய்யின் அரசியல் மற்றும் விஜய் வருகையால் இளைஞர்களின் மனநிலையிலுள்ள மாற்றம் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.


ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஷாம், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறிய வார்த்தைகள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பற்றிக் கூறிய கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.


அந்த பேட்டியில் நடிகர் ஷாம் “விஜய் அண்ணா அரசியலில் வந்ததுக்குப் பிறகு தான் மாணவர்கள் அரசியல் பற்றி பேச ஆரம்பிச்சு இருக்காங்க. அதுக்கு முன்னாடி வரைக்கும் மாணவர்கள் அரசியல்னா அசிங்கம், கேவலம் அப்படின்னு தான் நினைச்சிட்டு இருந்தாங்க. அந்த ஒரு மனுஷன் எல்லா விம்பத்தையும் மாத்திட்டாரு. விஜய் அண்ணா அரசியலுக்கு வந்ததுக்குப் பிறகு தான் அப்புடி மாறி இருக்கு.” என்று கூறியுள்ளார். 

இந்த கருத்து வெளியானதும், சமூக வலைத்தளங்களில் இது வேகமாக பரவத் தொடங்கியது. விஜய் ரசிகர்கள், ஷாமின் கருத்தை வரவேற்று பகிர்ந்து வருகின்றனர். 

Advertisement

Advertisement