• Jan 22 2026

" LIK " படத்திற்கு மீண்டும் வந்த சிக்கல்... சிதறியது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய திரைப்படம் தான் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK). கடந்த சில மாதங்களாக, ரசிகர்கள் மனதில் பெரும் ஆவலை ஏற்படுத்திய இந்த படம், முதலில் டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகுமென படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. 


ஆனால் தற்போது வெளியாகிய தகவல்கள் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய தகவல்கள் அதிகாரபூர்வ செய்தித் தளங்களில் வெளியாகியுள்ளன. அதன்படி, அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 12 அல்லது 13-ஆம் தேதி இப்படம் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement