விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இறுதியாக இந்த சீசனில் இருந்து ரம்யா ஜோவும், வியானாவும் வெளியேறி இருந்தனர்.
இந்த நிலையில், ரம்யா ஜோ தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்தபடி வைரலாகி வருகின்றது. அதன்படி அதில் அவர் கூறுகையில், நான் உண்மையாகவே டான்சர் என்றோ, மைக்கேல் ஜாக்சன் தங்கச்சி என்றோ, ப்ரொபஷனல் டான்சர் என்றோ சொல்லவில்லை
எனக்கு முன்னிலையில் எட்டு பேர் ஆடுவாங்க.. அவர்களை பார்த்து தான் நான் ஆடுவேன். அப்படித்தான் எனக்கு ஆட தெரியும். இத வச்சு ட்ரோல் பண்ணினால் நான் என்ன செய்ய முடியும்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் தனக்கு கனியையும் சபரியையும் தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் பார்வதியையும் கமருதீனையும் பிடிக்காது என்று தெரிவித்தார்.
பார்வதி உண்மையாகவே தன்னுடைய சுயநலத்திற்காக மற்றவர்களை தவறாக பயன்படுத்துகின்றார். இது எனக்கு பிடிக்கவில்லை. அவர் கொளுத்திப் போட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பார்.
அத்துடன் வினோத் அண்ணா உள்ள இருக்கும்போது எனக்கு பி ஆர் டீம் கிடையாது என்று சொன்னார். ஆனால் முழுக்க முழுக்க அவருக்கு பி ஆர் டீம் இருக்குது. இது எனக்கு அதிர்ச்சியாக போய்விட்டது என்று தெரிவித்துள்ளார்.
Listen News!