சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு பலரும் போராடி வருவது உண்டு. கிராமங்களில் வசிக்கும் பலர் சினிமா கனவோடு சென்னை நோக்கி செல்வதும் உண்டு. அப்படி கிராமங்களில் இருந்து சென்று சாதித்தவர்களும் உள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சூரி. இவர் நடிகராக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்தார். ஆரம்பத்தில் ஒரு சில கேரக்டர்களில் நடித்தார். இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்த படம் வெண்ணிலா கபடிக்குழு.
இதைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் காமெடியில் கலக்கி வந்த நடிகர் சூரிக்கு, மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது விடுதலை படம். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் கதாநாயகனாக களமிறங்கினார். அதிலும் வெற்றி கண்டார்.

தற்போதும் படங்களில் நடிப்பதற்காக தனது உடலை கட்டமைத்து வருகின்றார். சூரியின் துரித வளர்ச்சி, உடல் நிலை மாற்றம் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன..
சினிமா ஒரு பக்கம் என்றாலும் இன்னொரு பக்கம் பிசினஸிலும் பிசியாக இருக்கின்றார் சூரி. அதன்படி மதுரையில் அம்மன் என்ற பெயரில் சைவ உணவகமும், அய்யன் என்ற பெயரில் அசைவ உணவகம் நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில், தனது புதிய கிளையை திறந்து வைத்துள்ளார் நடிகர் சூரி. நடிகர் விமலும் அவருடன் சென்று தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். இதன் போது ஏராளமான ரசிகர்கள் சூரியை பார்க்க குவிந்ததும், அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு கைகாட்டி சென்ற காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!