• Dec 17 2025

வீட்டார்களின் டார்ச்சரில் உண்மையை சொன்ன மீனா.? அடிதடியில் இறங்கிய முத்து

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  சிந்தாமணியின் மகள் சத்யாவுடன் வந்து இறங்குவதை பார்த்து, ஏன் கண்டவங்க கூட வந்து இறங்கிற..? என்று சிந்தாமணி திட்டுகின்றார். ஆனாலும் அவர் சத்யாவை காணவில்லை.  அது எங்களுடைய கம்பெனியில் வேலை செய்பவர் என்றாலும் அவர்கள் கண்டவர்கள் தான்.. இனி  இவ்வாறு வரவேண்டாம் என்று எச்சரிக்கின்றார் .

மேலும் விஜயா வீட்டுக்கு வந்த சிந்தாமணி,  மீண்டும் க்ரிஷை வீட்டை விட்டு துரத்துவதற்கு பிளான் பண்ணுகிறார்.  இதன்போது  பார்வதி,  நீ இப்படியே பண்ணிக்கொண்டு இருந்தால்  உனது கை, கால் இழுத்து விடும் என்று பயமுறுத்துகின்றார். 

இதைத்தொடர்ந்து  முத்துவும் செல்வமும் டீக்கடை ஒன்றுக்கு செல்லும்போது அங்கு அருண்  தனது நண்பருடன் டீ குடித்துக் கொண்டிருக்கின்றார். இதை பார்த்த முத்து, வேறு கடைக்கு செல்லலாம் என்று சொல்ல,  அவனுக்கு பயந்து போற மாதிரி இருக்கும்  என்று அங்கேயே டீ குடிக்கின்றனர். 


இதன்போது  குழந்தை  பெற்றுக்கொள்ள வக்கு இல்லையா? அதுக்காகத்தான் குழந்தையை தத்தெடுக்குறியா? என்று தனது நண்பரிடம் பேசுவது போல முத்துவை  குத்தி பேசுகின்றார் அருண். ஒரு கட்டத்தில் கோவப்பட்ட முத்து அவர்களுடன் சண்டைக்கு செல்கின்றார். 

அந்த வழியால் வந்த அண்ணாமலை, முத்துவும்  அருணும் சண்டை போடுவதை பார்த்து   முத்துவுக்கு அறைகின்றார்.  அதன் பின்பு அருண் அங்கிருந்து கிளம்பி செல்கிறார். 

முத்து வீட்டிற்கு வந்ததும் எதற்காக சண்டை போட்டாய் என்று எல்லாரும் கேட்க , எல்லாம் மீனாவால தான். க்ரிஷை பார்க்கும் போது என்னை பார்ப்பது போலவே இருக்கின்றது. ஆரம்பத்தில் மீனா அவனை தத்தெடுக்கலாம் என்று சொன்னார். ஆனால் இப்போது வேண்டாம் என்கின்றார் . அதற்கான காரணத்தை  சொல்லவில்லை.  அதற்காக சீதாவிடம் சொன்னேன். சீதா அருணிடம் சொல்லிவிட்டார். இதனால அவன் என்னை அசிங்கப்படுத்திற மாதிரி பேசுறான்.

இதை கேட்ட அண்ணாமலை மீனாவிடம், ஆரம்பத்தில்  சம்மதம் தெரிவித்தது தானே.. இப்போ என்ன பிரச்சனை? அது என்ன காரணம் என்று கேட்க,  எல்லோரும் மாறி மாறி மீனாவை கேட்க ஆரம்பித்தனர்.  இதனால்  இதற்குப் பிறகு உண்மையை மறைத்து எதுவும் ஆகப் போவதில்லை என்று மீனா உண்மையை சொல்ல முனைய,  இடையில் ரோகிணி தடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.. 


Advertisement

Advertisement