• Dec 17 2025

"ஜனநாயகன்" படம் தெலுங்கு பட ரீமேக்கா.? ஸ்ரீலீலா என்ன இப்புடி சொல்லிட்டாங்க.!

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இனிமையான செய்தி ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. ஹீரோயின் ஸ்ரீலீலா தனது முதலாவது தமிழ் திரைப்படமான ‘பராசக்தி’ மூலம் திரையரங்கில் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தனது அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்துள்ளார்.


இந்த சந்திப்பில், “பராசக்தி படம் ஜனவரி 14 அன்று வெளியாகவுள்ளது. என்னுடைய முதலாவது தமிழ் படம். நான் ரொம்பவே excited-ஆ இருக்கிறேன். படம் ரொம்ப நல்லா இருக்கும்”.எனக் கூறியிருந்தார்.

மேலும் செய்தியாளர் ஒருவர், “விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படம், நீங்கள் தெலுங்கில் நடித்த ‘பகவந்த் கேசரி’ படத்தோட ரீமேக் என்று சொல்லுறாங்க. இது உண்மையா?” என்று  கேள்வி எழுப்பியிருந்தார்.


இதற்கு ஸ்ரீலீலா, “அது எனக்கு தெரியவில்லை.. ஆனா நானும் விஜய் சாரோட Fan தான்.”என்று கூறி சமாளித்துள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement