அருண் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான “ரெட்ட தல” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் கலந்துகொண்டு, அருண் விஜய் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்தார். அவரது பேச்சு தற்போது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

விழாவில் உரையாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்,“என்னை அறிந்தால் படத்திற்கு முன்னாள் வரைக்கும் அருண் விஜய் ஒரு மாதிரி இருந்தார். என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு அருண் விஜய்யின் வளர்ச்சி வேற மாதிரி இருக்கு. அவருடைய ஸ்கிரிப்ட் தேர்வு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. அவர் ஒரு கடினமான உழைப்பாளி.” எனக் குறிப்பிட்டார்.
2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம், அருண் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் அவர் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், அவரது நடிப்புத் திறனை வேறொரு கோணத்தில் வெளிப்படுத்தியது.

அந்தப் படத்திற்குப் பிறகு, அருண் விஜய் தனது கதைத்தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வருவதாகவும் சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையே ஏ.ஆர்.முருகதாஸின் பேச்சும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
Listen News!