பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 11 வாரங்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இறுதியாக இடம் பெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா ஆகியோர் வெளியேறினர்.
இந்த வாரம் இடம் பெற்ற நாமினேஷனில் கானா வினோத்தை தவிர மீதமுள்ள 11 போட்டியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இதனால் இந்த வாரத்திற்கான வீட்டு தலையாக கானா வினோத் காணப்படுகின்றார்.
இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில் சாண்ட்ரா மீண்டும் திவ்யா பற்றி விக்ரமிடம் புலம்புகின்றார்.

ஏற்கனவே அமித்திடம் என்னுடைய தலை வெடிக்குது. திவ்யா ஏன் இப்படி பண்றாங்கன்னு தெரியும்.. அவங்க பிரஜினை கேம்முக்கு யூஸ் பண்ணி இருக்காங்க என்று தான் எனக்கு தோன்றுகிறது என்று பேசியிருந்தார்.
இவ்வாறான நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில், என்னை விட பிரஜின் கூட திவ்யா ரொம்ப க்ளோசா இருந்தாங்க.. ஆனால் பிரஜின் வெளியேறிய போது நான் அழுது கொண்டு இருந்தேன்.
அந்த நேரத்தில் திவ்யா தன்னுடைய சூட்கேட்ஸை கொண்டு வந்து என்னுடைய ஆடைகளை எடுக்குமாறு சொல்லுகின்றார். அந்த நேரம் எனக்கு கட்டில் வேண்டும், பீரோவேண்டும் என்று சொல்லுகின்றார். இப்படி சொன்னா எனக்கு எப்படி இருக்கும் விக்ரம்? என்று மீண்டும் திவ்யாவை குறை சொல்ல ஆரம்பித்துள்ளார் சாண்ட்ரா.
Listen News!