• Feb 20 2026

பாக்கியத்தின் வார்த்தையால் கதறி அழும் மயில்.. சரவணனிடம் மன்னிப்புக் கேட்கும் பாண்டியன்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சரவணன் சாப்பிடாமல் அழுது கொண்டிருக்கிறதைப் பார்த்த கோமதி எப்புடி இருந்த பையனை இப்புடி ஆக்கிட்டுப் போய்ட்டால் என்று சொல்லி அழுகிறார். மேலும், இவன் எப்புடி இனி ஊருக்குள்ள தலை காட்டுவான் என்கிறார். அதனை அடுத்து பாண்டியன் சரவணனைப் பார்த்து பாவமடா நீ என்னால தான் இப்புடி எல்லாம் நடந்திட்டு என்கிறார்.


பின் பாண்டியன் தன்னை மன்னிச்சிடு சரவணா என்கிறார். மறுபக்கம் பாக்கியம் நம்ம மயில் வாழ்க்கை இப்புடி ஆனதுக்கு காரணம் நீ தான் என புருஷனைப் பேசுறார். மேலும் நீ உருப்படியான அப்பாவா இருந்திருந்தால் இப்புடி நடந்திருக்குமா என்று கேட்கிறார். அதைக் கேட்ட மயில் அப்பா நான் பதற்றத்தில உளறிட்டன் என்கிறார்.

அதனை அடுத்து மயில் தனக்கு தலை சுத்தி ஒரு மாதிரி இருக்கு என்கிறார். மேலும், இனி என்னோட புருஷனோட சேர்ந்து வாழேலா என்று சொல்லி அழுகிறார். அதைத் தொடர்ந்து மயில் தன்ர புருஷன் வீட்ட போய் இருக்கப்போறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியம் அதுதான் அவங்க துரத்திவிட்டுட்டாங்களே பிறகு ஏன் அங்க போற என்று கேட்கிறார்.


பின் பாக்கியம் நாம இப்ப அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது என்கிறார். மறுபக்கம் பாண்டியன் சரவணனை தனியா விட்டிட வேணாம் என்று கதிர் கிட்ட சொல்லுறார். அதனை அடுத்து பாக்கியம் மயிலோட வாழ்க்கையை சரி செய்ய என்னால முடியும் என்கிறார். அதைக் கேட்ட மயில் கல்யாணம் பண்ணாமல் கூட இருந்திடலாம் ஆனா இவங்க பேச்சைக் கேட்டு பொய் சொல்லி மட்டும் கல்யாணம் பண்ணிடாத சுடர் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement