சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் பிரபு, நடிகர் அஜித் மற்றும் விஜய் குறித்த தனது கருத்துகளை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் கவனம் ஈர்த்துள்ளார். இந்த சந்திப்பில், பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் முக்கியமானது அஜித் மற்றும் விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள் தான்.

அதன்போது செய்தியாளர்கள், “அஜித் தொடர்ந்து தனது படங்களிலும், கார் ரேஸிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். மறுபக்கம் விஜய் பல படங்களை முடிச்சிட்டு அரசியலில் இறங்கியிருக்கிறார். அது பற்றிய உங்களின் கருத்து என்ன?" என்று கேட்டனர்.

அதற்கு பிரபு, "அரசியலில யார் வேணும் என்றாலும் வரலாம் என விஜய்யின் அரசியல் குறித்து கூறியதுடன், ரெண்டு பேருக்குமே வாழ்த்துக்கள்." எனவும் தெரிவித்திருந்தார்.
அஜித் மற்றும் விஜய் இருவரும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள். இவர்கள் இருவரும் அதிரடியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபுவின் கருத்து அவர்களுக்கு தனித்துவமான அடையாளத்தைக் கொடுத்துள்ளது.
Listen News!