• Dec 17 2025

வெளியில் சிரிப்பு… உள்ளே சோகம்.! விவேக் வாழ்க்கையின் மறுபக்கத்தை வெளிப்படுத்திய மனைவி

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை என்றாலே முதலில் நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று நடிகர் விவேக். தனது நகைச்சுவையால் மட்டும் அல்லாமல், சமூக அக்கறை, சிந்தனை தூண்டும் வசனங்கள் மற்றும் மனிதநேய செயல்பாடுகள் மூலமாக மக்களின் மனதில் ஆழமாக பதிந்தவர். ஆனால், அந்த சிரித்த முகத்தின் பின்னால், வாழ்நாள் முழுவதும் அவர் சுமந்த வலி இருந்தது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.


சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, தனது கணவர் விவேக் அனுபவித்த துயரத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அவரது இந்த உருக்கமான பேச்சு, ரசிகர்களையும் திரையுலக பிரபலங்களையும் சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது.

அந்த நேர்காணலில் அருட்செல்வி, “என் மகன் கிட்ட சின்ன வயசில விவேக் கிட்ட இருந்த எல்லா சேட்டையும் இருந்திச்சுனு அவங்க அம்மா சொல்லுவாங்க. மகன் இறந்த சோகத்தை அவர் வெளியில காமிக்கவே இல்ல. ஆனா எனக்குத் தெரியும் ஒரு தகப்பனுக்கு ஒரு புத்திர சோகம் கடைசி வர மனசில இருக்கும். ஆனா, அவர் நகைச்சுவை நடிகராக இருந்ததால அவர் வெளியில காமிச்சுக்கல... ஆனா கடைசி வரை மகன் இறந்த சோகம் அவருக்கு இருந்தது." என்று தெரிவித்திருந்தார்.


திரையுலகில் எப்போதும் சிரிப்பையும் சிந்தனையையும் ஒரே நேரத்தில் கொடுத்த விவேக், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த மிகப் பெரிய இழப்பை ஒருபோதும் வெளிக்காட்டவில்லை.

மேடைகளில், பொதுநிகழ்ச்சிகளில், சமூக சேவை பணிகளில் அவர் எப்போதும் உற்சாகமாகவே காணப்பட்டார். ஆனால் அந்த சிரிப்பின் பின்னால், ஒரு தந்தையாக மகனை இழந்த வலி அவரை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருந்ததாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement