• Dec 17 2025

வெறித்தனமா Vibe ஆகலாமா.? ரசிகர்களை குஷிப்படுத்திய ஜனநாயகன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

subiththira / 22 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகரான தளபதி விஜய் நடிப்பில், பிரபல இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “ஜனநாயகன்”, விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இப்படம் 2026 ஜனவரி 9 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின், ப்ரீ பிசினஸ் அப்டேட்கள், பாடல்கள், கதை, முக்கிய நடிகர்கள் மற்றும் காமியோ காட்சிகள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அண்மையில் வெளியாகிய தகவலின்படி, “ஜனநாயகன்” படத்தின் மொத்த ரன் டைம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


சிலர், “இவ்வளவு நீளமான படம்! நிச்சயம் பெரிய அனுபவமாய் இருக்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம், இப்படத்தின் நீளமும், கதையின் வலிமையும் ரசிகர்களுக்கு புதிய திரைப்பட அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement