• Dec 17 2025

SK ரசிகர்களே ரெடியா இருக்கீங்களா.? "பராசக்தி" படக்குழு எடுத்த அதிரடி முடிவு.!

subiththira / 21 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அடுத்தாண்டு (2026) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ள படங்களில் முக்கியமானது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் 'பராசக்தி'. பிரபல நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம், திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலையும், சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் 'பராசக்தி' திரைப்படம், சிறந்த கதைக்களம், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இதன் மூலம் ரசிகர்கள் மட்டுமின்றி இசை ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான தருணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பராசக்தி’ படக்குழு சமீபத்தில் வெளியிட்ட காணொளி மற்றும் அறிவிப்பு தற்பொழுது வைரலாகி வருகின்றது. 


அதன்படி, டிசம்பர் 18-ந் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில், படத்தில் வரும் முக்கிய காட்சிகளை கொண்ட 10 நிமிட ஸ்பெஷல் வீடியோ வெளியிடப்பட உள்ளது. இது, படத்தின் மேம்பட்ட கதை, காட்சிகள் மற்றும் நடிகர்களின் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இது சினிமா வரலாற்றில் முதன்முறையாக நடைபெறவிருக்கும் நிகழ்வு என்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில், இந்த வீடியோ வெளியீடு பற்றிய தகவல்கள் பரவி வருகின்றன.

சிலர், “இத்தகைய 10 நிமிட ஸ்பெஷல் வீடியோ வெளியீடு ரசிகர்களுக்கு படத்தின் உண்மையான அனுபவத்தை தரும்” என உற்சாகம் தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பு வீடியோ, திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் நடிகர்களின் திறமையை முன்னிலை படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement