• Dec 17 2025

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்.! மீண்டும் வைரலாகும் புகைப்படங்கள்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன் பின்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை சிம்புவை வைத்து இயக்கினார். அந்தப் படம் தோல்வி படமாக அமைந்தது. 

இதைத்தொடர்ந்து பிரபுதேவாவை வைத்து பகிரா என்ற படத்தையும் இயக்கினார். ஆனால் அந்தப் படமும் கவனம் பெறவில்லை.  அதன் பின்பு மார்க் ஆண்டனி படம்  இவருடைய இயக்கத்தில் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூலை குவித்து வரவேற்பு பெற்றது. 


சமீபத்தில்  அஜித் குமாரை வைத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கியிருந்தார். இந்த படம்  ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மட்டும் இல்லாமல்  அஜித்துக்கும் மிகப்பெரிய  பாராட்டை பெற்றுக் கொடுத்தது.  இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி  ஏகே 64ல் இணைய உள்ளது. 

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆதித் ரவிச்சந்திரனுக்கும்  பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணத்தின் போது நடிகர் விஷால்  எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement