எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்றைய ப்ரோமோவில், போலீசாரிடம் அனைத்து டாக்குமெண்ட்களை அப்பத்தா கொடுக்கின்றார். மேலும் இந்த வழக்கில் குழப்பம் இருப்பதால் தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என போலீசார் கிளம்பி செல்கின்றனர்.
அதற்குப் பிறகு ஜனனி, அப்பத்தாவை அழைத்து பேசுகின்றார். இதன் போது எவ்வளவோ கஷ்டத்தை தாண்டி நீ வந்திருக்க, வந்தது முக்கியமில்லை, எதையும் நீ விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்று பார்க்கவியை பார்த்து கூறுகின்றார்.
இதன் போது தமிழ் சோறு புட்டிங் டிராக் திறப்பு விழாவுக்கு நீங்க கண்டிப்பா வரணும் என்று அப்பத்தாவை ஜனனி கேட்க, நான் வர்றதாகவே இருக்கட்டும், உங்க கடையை யார் திறந்து வைப்பாங்க என்று ஜனனியை லாக் பண்ணுகின்றார் அப்பத்தா.

இன்னொரு பக்கம் ஆதிகுனசேகரனுக்கு போன் பண்ணிய அறிவுக்கரசி, போலீஸ் உங்களை வலை வீசி தேடிக்கொண்டு இருக்கின்றார்கள். இதுக்கப்புறம் நமக்கு டைம் கிடையாது. எதுவா இருந்தாலும் முடிச்சு விட்ரனும் என்று கூறுகின்றார்..
இவ்வாறு அப்பத்தாவின் வரவால் ஆட்டம் கண்டிருக்கும் ஆதி குணசேகரன் டீமுக்கு அடுத்த மூவ் என்ன என்பது புரியாத புதிராகவே காணப்படுகின்றது. ஏற்கனவே விஷாலாட்சியின் அண்ணன் சாமியாடி வீட்டுக்கு வந்த போது பெரிய உசுரு ஒன்று போகப்போகுது எனக்கூறி இருந்தார். அந்தப் பெரிய உசுரு அப்பத்தாவா அல்லது விஷாலாட்சியா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.
Listen News!