கேரள நடிகையின் பாலியல் வன்கொடுமை வழக்கில் எட்டு ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு ஆறு பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்கால தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் உள்ளிட நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தப்பட்ட நடிகை மஞ்சு வாரியரும் இது தொடர்பாக கருத்து தெரிவித்தனர். அதன்படி, நீதிமன்றத்தின் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி முழுமையாக கிடைக்கவில்லை.

குற்றத்தை செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தை திட்டமிட்டு, அதற்கு மாஸ்டர் மைண்ட்டாக செயல்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இன்னும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அது அச்சமூட்டும் வகையில் காணப்படுகிறது என்று மஞ்சு வாரியர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகை மஞ்சுவாரியரின் பக்கமே தான் நிற்பதாக நடிகரும் இயக்குனருமான அமீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவருடைய பதிவில், பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்பதே அறம்.. தீர்ப்புகள் எல்லாம் நீதியாகி விடாது.. மஞ்சு வாரியரின் பக்கமே நான் நிற்கின்றேன் என தெரிவித்துள்ளார்..
Listen News!