பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மயில் குடும்பம் பாண்டியன் வீட்டுக்கு வெளியில நிற்கிறதைப் பார்த்த காந்திமதி பெரிய பிரச்சனை நடக்குது போலயே என்று யோசிச்சுக் கவலைப்படுறார். அதனை அடுத்து குழலி வெளியில போன பிறகும் அவங்க ட்ராமாவ நிறுத்தல போல நான் போய் என்னன்னு கேட்டுட்டு வாறன் என்கிறார். அதுக்கு பாண்டியன் நம்ம முடிவ நாம சொல்லிட்டோம் இனி அவங்க என்ன செய்தால் நமக்கு என்ன என்கிறார்.

மறுபக்கம், மயில் அம்மா என்ர பொண்ணை உங்க பையனுக்கு கட்டிக்கொடுத்தது இப்புடி வெளியில அனுப்பிவிடவா என்று கேட்கிறார். பின் மயில் அம்மா சக்திவேல் கிட்ட கல்யாணம் முடிஞ்சதில இருந்து என்ர பொண்ணு நிம்மதியாவே இல்ல என்று சொல்லி கவலைப்படுறார். அதனைத் தொடர்ந்து மயிலோட அம்மா பாண்டியன் குடும்பத்துக்கு சாபம் போடுறார்.
அதைக் கேட்ட பாண்டியன் அந்த பொம்பிளையோட சாபம் ஒன்னும் பலிக்காது என்கிறார். பின் சக்திவேல் இந்தப் பிரச்சனையை பொலிஸ் ஸ்டேஷனில போய் கதைக்க சொல்லுறார். மேலும், இங்க நின்று நேரத்தை வீணாக்காமல் போய் புகார் கொடுங்க என்கிறார் சக்திவேல். அதைக் கேட்ட பாண்டியன் சக்திவேலை பேசிக்கொண்டிருக்கிறார்.

அதைப் பார்த்த காந்திமதி இப்புடி ரெண்டு குடும்பமும் சண்டை போடாமல் அமைதியா இருங்க என்று சொல்லுறார். பின் சரவணன் மயில் கிட்ட எல்லாத்துக்கும் காரணம் நீ தான் என்று சொல்லிப் பேசுறார். அதனை அடுத்து மயிலோட அம்மா நடந்தது நடந்து முடிஞ்சிட்டு என்ர பொண்ணை உள்ள கூட்டிக் கொண்டு போங்க என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!