தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் மைல்கல்லாக அமைந்த திரைப்படங்களில் ஒன்று ‘படையப்பா’. 1999ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், கதை, நடிப்பு, இசை, வசனம் என அனைத்தாலும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது. இன்றளவும் ரஜினிகாந்தின் சிறந்த படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ முக்கிய இடம் பிடித்து வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் ‘படையப்பா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பலமுறை தொலைக்காட்சியிலும் டிஜிட்டல் தளங்களிலும் பார்த்திருந்தாலும், பெரிய திரையில் மீண்டும் அந்த அனுபவத்தை பெறுவது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘படையப்பா’ ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இதுவரை நான்கு நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் சேர்த்து ரூ.15.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படங்களில் மிகப்பெரிய வசூல் சாதனையாக பார்க்கப்படுகிறது.
பழைய படம் என்றாலும், ரசிகர்களின் ஆதரவு குறையாமல் இருப்பது ரஜினிகாந்தின் ரசிகர் பலத்தையும், ‘படையப்பா’ படத்தின் timeless appeal-ஐயும் தெளிவாக காட்டுகிறது. பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களில் ஒருவராக அறியப்படும் நடிகர் சிவகார்த்திகேயன், ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள ‘படையப்பா’ திரைப்படத்தை சமீபத்தில் திரையரங்கில் நேரில் கண்டு ரசித்துள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Fan moment of #Thalaivar’s OG fan – our @Siva_Kartikeyan annan 🤩🤩💥💥💥
Showtime: #Padayappa 🎬🔥#SuperstarRajinikanth #Sivakarthikeyan #SK pic.twitter.com/3h2Nak8hgu
Listen News!