• Dec 17 2025

"கொம்புசீவி" படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஹிட் இயக்குநருடன் இணையும் சண்முகபாண்டியன்.!

subiththira / 20 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல தலைமுறைகளைக் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் ஒருவர் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன், அப்பாவின் கலைப்பயணத்தைப் பின்பற்றி தமிழ் திரையுலகில் தனக்கென இடம் பிடித்து வருகிறார்.


சண்முக பாண்டியன் தனது திரை பயணத்தை சகாப்தம் திரைப்படத்துடன் ஆரம்பித்தார். அப்பாவைப் போலவே நடிப்பில் ஆர்வம் காட்டிய அவர், அந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகினார். 

பின் பல வருடங்கள் கழித்து, சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான படைத்தலைவன் திரைப்படம் அதிகளவான வரவேற்பினைப் பெறவில்லை. 


அதன்பின், பொன்ராம் இயக்கத்தில் உருவாகிய 'கொம்புசீவி' படத்தில் நடித்து, சண்முக பாண்டியன் திரை ரசிகர்களைக் கவரவுள்ளார். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கொம்புசீவி திரைப்படம் 19ம் தேதி வெளியாகவிருக்கிறது. 

கொம்பு சீவி படத்தின் இயக்குனர் பொன்ராம் என்பதால், இப்படத்தின் வெற்றி உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கொம்புசீவி படத்துக்குப் பிறகு சண்முக பாண்டியன் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படம் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாக உள்ளது. மித்ரன் ஜவகர், தமிழ் சினிமாவில் அதிகளவான திரைப்படங்களை இயக்கியவர். அவருடைய இயக்கங்களுள் உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

இந்த புதிய படம் எஸ் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ளது, அதே நிறுவனம் கொம்பு சீவி படத்தையும் தயாரித்தது. அதனால், இந்த புதிய கூட்டணி திரை உலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement