பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் முகம் சுளிக்க வைக்கும் சில சம்பவங்களும் இந்த சீசனில் அரங்கேறி வருகின்றன. விஜய் சேதுபதியின் எச்சரிக்கையை மீறிய செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வழக்காடு மன்றம் டாஸ்க் நடைபெற்றது. வழக்கமாகவே சண்டை, சச்சரவு, கூச்சல் என்று இருந்த போட்டியாளர்கள் தங்களுடைய வன்மத்தை அதில் கொட்டி தீர்த்தனர். இறுதியில் கமருதீன், பார்வதியின் செயற்பாட்டால் மொத்த பிக் பாஸும் பாதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கடந்த வாரம் பிக் பாஸ் எலிமினேஷனில் வியானாவும் ரம்யா ஜோவும் வெளியேறினார்கள். இது பலருக்கு அதிருப்தியை கொடுத்தது.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பித்து 71 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் நாமினேஷன் டாஸ்க் கொடுக்கப்படுகிறது .

அதன்படி பிக் பாஸில் இருந்து இரண்டு பேரை வெளியேற்ற யாரை நாமினேட் செய்ய விரும்புகின்றீர்களோ, அந்தநபரை தேர்ந்தெடுத்து அதற்கான காரணத்தையும் சொல்லிவிட்டு பெயிண்டை எடுத்து முகத்தில் பூச வேண்டும் என்று பிக் பாஸ் டாஸ்க்கை வாசிக்கின்றார்.
இதைத்தொடர்ந்து ஆதிரை சாண்ட்ராவை சொல்லுகின்றார். அவரால் இங்கே இருக்க முடியலையோ என்று தனக்குத் தோன்றுவதாக சாண்ட்ராவை தேர்ந்தெடுத்து அவருக்கு பெயிண்டை முகத்தில் பூசுகின்றார்.
அதன்பின்பு சாண்ட்ரா, கமருதீனை தேர்ந்தெடுத்து திவ்யா கிட்ட அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை. அங்கு என்னால் பேச முடியவில்லை. அதனால் அவரை தேர்ந்தெடுக்கின்றேன் என்று அவரை நாமினேஷன் செய்து அவருக்கு முகத்தில் பெயிண்டரை பூசுகின்றார்.
மேலும் தேவையில்லாமல் சண்டையை வளர்க்கிறார்கள் என்று அமித் திவ்யாவை தேர்ந்தெடுக்க , ரொம்ப வார்த்தையை விடுறீங்க, ரொம்ப கத்துறீங்க என்று எப்ஜேயை சுபிக்ஷா தேர்ந்தெடுக்கின்றார். இறுதியாக கனியை நாமினேட் பண்ணுகின்றார் பார்வதி. இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
Listen News!